MARC காட்சி

Back
அருள்மிகு வெங்கிடாசலபதி கோயில்
245 : _ _ |a அருள்மிகு வெங்கிடாசலபதி கோயில் -
246 : _ _ |a சிந்துபட்டி பெருமாள் கோயில், தென் திருப்பதி
520 : _ _ |a ஏறக்குறைய 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் பன்னிரண்டு பட்டி நாயக்கர்களும் வழிபட்டு, நிர்வாகம் செய்துள்ளனர். இந்தக் கோயில் தற்போது, தமிழக அரசின் அறநிலையத் துறையின் மேற்பார்வையில் உள்ளது. அரசு நியமனம் செய்த அறங்காவலர் குழு கோயில் நிர்வாகத்தை கவனித்து வருகிறது. திருப்பதி வேங்கடாசலபதிக்கு நேர்ச்சை செய்வதாக வேண்டிக் கொள்பவர்கள், ஏதாவது அசௌகரியத்தால் திருப்பதி செல்ல முடியாமல் போனால், அதை இங்கே நிறைவேற்றிக் கொள்ளலாம். பெருமாளும் திருப்பதி பகுதியில் இருந்து வந்தவர் என்பதால், இந்தத் தலம் தென்திருப்பதி என்றே போற்றப்படுகிறது. பெருமாளை அங்கப் பிரதட்சிணம் செய்து, இந்திரன் சாப விமோசனம் பெற்றதால், இங்கே அங்கப்பிரதட்சிணம் செய்து வழிபட்டால் தங்கள் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. கம்பத்துக்கு திருமஞ்சனம் செய்து வழிபட்டால், குழந்தைப் பேறு, தடைபெற்ற திருமணம், தொலைந்துபோன பொருள்கள் உடனே கிடைக்கும் என்பதுவும் ஐதீகமாக கடைபிடிக்கப்படுகிறது. கோமாதா வழிபாடு செய்து வழக்கில் வெற்றி, குழந்தைப்பேறு ஆகியவற்றைப் பெறுகிறார்கள். புதுமணத் தம்பதியர், அந்த வருடத்தில் வரும் விஜயதசமித் திருநாளில் இங்கே வந்து, நோன்பு எடுத்து, அர்ச்சனை செய்து, பெருமாள், தாயார் அருள்பெற்றுச் செல்வதை மகர்நோன்பு என்கிறார்கள். இந்தப் பழக்கம் இப்போதும் பரம்பரையாக இந்தப் பகுதிகளில் கடைப்பிடிக்கப்படுகிறது.
653 : _ _ |a பெருமாள் கோயில், வெங்கிடாசலபதி, சிந்துபட்டி, பெருமாள்பட்டி, நாயக்கர், மதுரை
700 : _ _ |a காந்திராஜன் க.த.
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
902 : _ _ |a 97918 35580 
905 : _ _ |a நாயக்க மன்னர்கள் / கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு
909 : _ _ |a 2
910 : _ _ |a 300 ஆண்டுகள் பழமையானது. நாயக்கர் கால கட்டடக்கலைக்கு சிறந்த சான்றாக விளங்குகிறது.
914 : _ _ |a 9.8958918
915 : _ _ |a 77.8738864
916 : _ _ |a வெங்கிடாசலபதி
917 : _ _ |a பெருமாள்
918 : _ _ |a அலர்மேல் மங்கை
922 : _ _ |a புளியமரம்
925 : _ _ |a ஒருகால பூசை
926 : _ _ |a வைகாசி பிரம்மோற்ஸவம், ஆடிப் பெருந்திருவிழா, ஆவணி மாத கிருஷ்ணன் பிறப்பு, புரட்டாசி சனிக்கிழமைகள், கார்த்திகை தீபத் திருவிழா, மார்கழி மாத சிறப்பு வழிபாடுகள், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு, தைமாதப் பிறப்பு (பொங்கல் சிறப்பு விழா)
927 : _ _ |a வெங்கடாசலபதி கோயில் சுவாமி சன்னதி முன்னுள்ள மண்டபத் தூண், அகத்தாரிலிருக்கும் இரசை கிராம நாட்டாண்மை சங்கரனாதர் மகன் கெண்டராமனாயக்கரின் உபையமாக அமைக்கப்பட்டதைக் குறிப்பிடுகிறது. தாசரிநாயக்கர் மகன் திருமலை நாயக்கரின் உபயமாக வெங்கடாசலபதி கோயில் சுவாமி சன்னதி முன்பாக ஒரு தூண் அமைக்கப்பட்டுள்ளது. வெங்கடாசலபதி கோயில் அம்மன் சன்னதி முன்புள்ள மண்டபத்தூண் ஏழாயிரம் பண்ணையிலிருக்கும் அங்கப்பனாசாரி என்பவரது மகனும், கல்வேலை செய்து வந்தவருமான வெள்ளையனாசாரி என்பவர் விப வருடம் பங்குனி மாதத்தில், அம்மன் மண்டபத்தின் முன்னுள்ள தூணை உபையமாகச் செய்தளித்துள்ளார். வெங்கடாசலபதி கோயில் அம்மன் சன்னதி முன்புள்ள மண்டபத் தூண், பொருப்புப்பட்டியின் நாட்டாண்மையாக இருந்த பெத்தி நாயக்கரின் மகன் தாசரி நாயக்கர் என்பவரின் உபையமாக நிறுவப்பட்டுள்ளது. மற்றொருத்தூணில் உள்ள கல்வெட்டு, இத்தூண் வெங்கடப்ப நாயக்கரின் உபையமாகச் செய்தளிக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்கிறது. மற்றொருத் தூண் இராமகிருஷ்ணம நாயக்கர் என்பவரால் செய்தளிக்கப்பட்டுள்ளது. வெங்கடாசலபதி கோயில் அர்த்த மண்டப நிலைக்கால் கல்வெட்டு, திருவேங்கட அய்யன், ரங்க அய்யன் ஆகியோரது சதா சேவையைக் குறிக்கிறது. வெங்கடாசலபதி கோயில் அர்த்த மண்டப நுழைவாயில் திருவாசியின் பின்புறமுள்ள உத்திரக்கல்லில் உள்ள கல்வெட்டொன்றில், ஊரின் பெயர் சிந்து நகரம் என்றும் சுவாமி சன்னதி திருவேங்கடமுடை யான் சன்னதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. குப்பாண்டி முதலியார் இக்கோயிலில் திருவாசி செய்து கொடுத்ததை இக்கல்வெட்டு குறிப் பிடுகிறது. இப்பணி கி.பி. 1822-இல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோயிலுக்கு அருகிலுள்ள தனிக்கல் கல்வெட்டொன்று, திடியன் சீர்மை நாட்டாரான நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் சந்தக்குடி திருக்குள இறைவனுக்கு துப்பக்குடி, சேந்தங்குடி, பாப்பாரபட்டி முதலிய ஊர்களின் நிலவருவாயினை நல்கி பட்டையம் கொடுத்ததைக் குறிப்பிடுகிறது.
928 : _ _ |a தற்கால சுவரோவியங்களாக பெருமாள், சரஸ்வதி, லெட்சுமி, முருகன் ஆகிய தெய்வ வடிவங்கள் வரையப்பட்டுள்ளன.
929 : _ _ |a கருவறையில் நின்றநிலையில் வெங்கிடாசலபதி நிலமகள் மற்றும் திருமகளுடன் காட்சியளிக்கிறார். பெருமாள் சந்நிதி மற்றும் தாயார் சந்நிதியில் உள்ள மண்டபத் தூண்களில் அமைந்துள்ள நாயக்கர் மற்றும் அவர் தம் துணைவியர் சிற்பங்கள் எழில் வாய்ந்தவை. இச்சிற்பங்கள் எண்ணிறந்தனவாக காணப்படுகின்றன. மேலும் அனுமன், குரங்குடன் பாம்பு, காளி, இராமன், கொக்கு, அன்னம், பெண்கள் ஆகிய சிற்பங்களும் புடைப்புச் சிற்பங்களாக தூண்களில் வடிக்கப்பட்டுள்ளன. பெருமாள் மற்றும் தாயார் கருவறை விமானங்களின் தளங்களில் சுதைச் சிற்பங்களாக கிருஷ்ணலீலை, பெருமாள், இராமர், லெட்சுமி போன்ற தெய்வ வடிவங்கள் அமைந்துள்ளன. திருச்சுற்றில் அண்மையில் புதிதாக சக்கரத்தாழ்வாருக்கு சந்நிதி அமைத்திருக்கின்றனர். சக்கரத்தாழ்வாரும் யோக நரசிம்மரும் அருள்புரிகின்றனர். திருச்சுற்றில் அமைந்துள்ள வாகன மண்டபத்தில் யானை, மயில், சிங்கம், பல்லக்கு, இரதம் போன்ற மரத்தால் செய்யப்பட்ட வாகனங்கள் காணப்படுகின்றன.
930 : _ _ |a திருப்பதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள சந்திரகிரிக் கோட்டை பகுதி, விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயரின் ஆளுகையில் இருந்தது. கி.பி.1530-களில், கிருஷ்ணதேவராயரின் மறைவுக்குப் பிறகு, சுல்தான்கள் படையெடுத்து, சந்திரகிரிக் கோட்டையை தாக்கினர். சந்திரகிரிக்கோட்டை பகுதியில், கஞ்சி தேசத்தைச் சேர்ந்த நாயக்கர் இனத்தவர் ஏராளமாக வசித்தனர். அவர்களில் சிலர் விஜயநகர வம்சாவளியினர். சுல்தான்களால், அவர்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்தனர். அவர்களுடைய இனத்துப் பெண்களை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து, அந்தப்புரத்தில் தள்ளினராம். ஒருமுறை தாங்கள் கௌரவமாகக் கருதும் ஒரு பெண்ணை திருமணம் செய்து தருமாறு சுல்தான் கட்டளையிட, அதற்கு கால அவகாசம் கேட்டுள்ளனர் அந்தக் குடும்பத்தார். ஆனால் தங்கள் இனத்துப் பெண்கள், சுல்தான்களின் அந்தப்புரத்தில் அவதியுறுவதை விரும்பாத சில குடும்பங்கள், இரவோடு இரவாக நாட்டை விட்டுக் கிளம்பி தெற்கு நோக்கிச் சென்றன. அப்போது, தாங்கள் பூஜித்து வந்த வேங்கடாசலபதி பெருமான், ஸ்ரீதேவி- பூதேவி விக்கிரகங்களையும் தங்களுடன் எடுத்துச் சென்றனர். வைகை ஆற்றையும் தாண்டி தொலைவுக்குச் சென்றுவிட வேண்டும் என்பது அவர்கள் எண்ணம். வழியில், ஒரு கிராமத்தில் அன்று இரவு தங்க நேர்ந்தது. தாங்கள் கொண்டு வந்திருந்த பொருட்களை ஓர் இடத்தில் வைத்தனர். தங்களுடன் எடுத்து வந்த பூஜைப் பொருட்களைக் கொண்டு, உற்ஸவ விக்கிரகங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பத்திரப்படுத்தி வைத்தனர். பொழுது விடிந்ததும் பூஜைப் பொருள்கள் வைத்திருந்த பெட்டிகளுடன், பெருமாள் உற்ஸவ விக்கிரகங்களை வைத்திருந்த பெட்டிகளையும் தூக்க முயன்றனர். ஆனால், அந்தப் பெட்டிகளை கொஞ்சம் கூட அசைக்க முடியவில்லை. வேறு வழியில்லாமல், பெட்டிகளை அங்கேயே வைத்துவிட்டு அங்கேயே தங்கினர். அன்று இரவு அந்தக் குழுவிலிருந்த பெரியவர் ஒருவரின் கனவில் பெருமாள் காட்சி தந்தார். ''நீங்கள் யாரும் பயம் கொள்ள வேண்டாம். இந்தப் பகுதி மக்கள் உங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள். அவர்களால் உங்களுக்கு எந்தத் தீங்கும் நேராது. அப்படி ஏதும் நடக்காமல் நான் உங்களைக் காப்பேன். நாளை காலை பெட்டியிலிருந்து ஓர் அங்கவஸ்திரத்தை கருடன் தூக்கிச் சென்று கண்மாய்க்குக் கீழ்ப்புறத்தில் உள்ள ஒரு புளிய மரத்தில் போட்டுவிட்டு, மூன்று முறை குரல் எழுப்பிச் செல்லும். அந்த இடத்தில் என் விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்புங்கள்...'என்று சொல்லி மறைந்தார். கண்விழித்த பெரியவர், தனது கனவு பற்றி அருகில் இருந்தவர்களிடம் சொல்ல, எல்லோரும் பெருமாளின் திருவருளை வியந்து போற்றி விடியலுக்காகக் காத்திருந்தனர். மறுநாள் காலையில், கனவில் பெருமாள் சொன்னது போல், வானத்தில் வட்டமிட்ட கருடன், பெட்டியில் இருந்த அங்கவஸ்திரத்தைத் தூக்கிச் சென்று, சற்று தொலைவில் இருந்த புளிய மரத்தில் போட்டது. அந்த இடத்திலேயே விக்கிரகத்தை வைத்து, தேவியர் சகிதராக பெருமாள் மூலவரையும் பிரதிஷ்டை செய்து, கோயிலும் எழுப்பினர்.
932 : _ _ |a இக்கோயிலின் நுழைவாயில் கோபுரத்துடன் தொடங்குகிறது. நீண்ட நெடிய மதிற்சுவரை நாற்புறமும் கொண்டுள்ளது. பெருமாள் திருமுன் (சந்நிதி), அம்மன் திருமுன் என்ற இரண்டு தனித்தனி சந்நிதிகளைக் கொண்டுள்ளது. பெருமாளின் திருமுன் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றைக் கொண்டு விளங்குகின்றது. கொடிமரத்துக்குப் பின், கருடாழ்வார் சந்நிதி. தூண் வேலைப்பாடுகளுடன் கூடிய ஊஞ்சல் மண்டபம் மற்றும் விழா மண்டபம் அமைந்துள்ளது. திருச்சுற்றில் அண்மையில் புதிதாக சக்கரத்தாழ்வாருக்கு சந்நிதி அமைத்திருக்கின்றனர். சக்கரத்தாழ்வாரும் யோக நரசிம்மரும் அருள்புரிகின்றனர். திருச்சுற்றில் அமைந்துள்ள வாகன மண்டபத்தில் யானை, மயில், சிங்கம், பல்லக்கு, இரதம் போன்ற மரத்தால் செய்யப்பட்ட வாகனங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு நாயக்கர் சமூகத்தவரும் ஒவ்வொரு வாகன உற்சவத்தை நிகழ்த்துகிறார்கள். மண்டபங்களில் உள்ள தூண்களில் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. சில தூண்கள் கல்வெட்டுகளைப் பெற்றுள்ளன. பெருமாள் கோயில் கருவறை விமானம் தளங்களில் பெருமாளின் திருஅவதாரச் சிற்பங்களைக் கொண்டுள்ளது. அவை சுதைச் சிற்பங்களாக விளங்குகின்றன. தாயார் கருவறை விமானமும் தளச்சிற்பங்களைப் பெற்றுள்ளது. தலமரமாக புளிய மரம் முதற்சுற்றில் உள்ளது. மண்டபத் தூண்களில் அமைந்துள்ள வணங்கிய நிலையில் காட்டப்பட்டுள்ள நாயக்கர்கள் மற்றும் அவர் தம் துணைவியர் சிற்பங்கள் மிகவும் எழில் வாய்ந்தவை. இவர்களின் உருவ வேறுபாடுகள் மற்றும் ஆடையணிகளின் அமைப்புகள் சிற்பங்களில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a கூடக்கோயில் பெருமாள் கோயில், திடியன் மலை கைலாசநாதர் கோயில், தொட்டப்பநாயக்கனூர் சிவன் கோயில்
935 : _ _ |a மதுரை மாவட்டம்- திருமங்கலம்-உசிலம்பட்டி சாலையில், சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது சிந்துப்பட்டி பெருமாள் கோயில்.
937 : _ _ |a திடியன்மலை, சிந்துபட்டி, அம்பட்டையான்பட்டி
938 : _ _ |a மதுரை
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a மதுரை நகர விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000114
barcode : TVA_TEM_000114
book category : வைணவம்
cover images TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_நுழைவாயில்-0001.jpg :
Primary File :

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_நுழைவாயில்-0001.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_உற்சவ-மண்டபம்-0002.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_முகமண்டபம்-0003.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_தூண்கள்-0004.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_அம்மன்-திருமுன்-0005.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_புடைப்பு-சிற்பம்-0006.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_சமையலறை-0007.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_தூண்-சிற்பம்-0008.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_நீராட்டு-மண்டபம்-0009.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_சக்ரத்தாழ்வார்-0010.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_கருவறை-விமானம்-0011.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_தள-அமைப்பு-0012.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_சுடுமண்-சிற்பம்-0013.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_தல-மரம்-0014.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_திருமதில்-0015.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_சொர்க்கவாசல்-0016.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_கொடிமரம்-0017.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_வாயிற்காவலர்-0018.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_வாயிற்காவலர்-0019.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_இராஜகோபால-சுவாமி-0020.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_பாலகிருஷ்ணன்-0021.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_திருமகள்-நிலமகள்-0022.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_ஆழ்வார்கள்-0023.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_இராமர்-சீதை-0024.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_தூண்-சிற்பம்-0025.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_ஓவியம்-0026.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_தூண்-0027.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_மகிசாசுரமர்த்தினி-0028.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_வீரன்-0029.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_அடியவர்-0030.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_கிருஷ்ணன்-0031.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_கணபதி-0032.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_நாயக்கர்-0033.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_குரங்கு-பாம்பு-0034.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_கொக்கு-0035.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_காளிங்கநர்த்தனம்-0036.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_நாயக்கர்-0037.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_அன்னம்-0038.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_அடியவர்கள்-0039.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_அடியவர்கள்-0040.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_அடியவர்-0041.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_கல்வெட்டு-0042.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_பசுவும்-கன்றும்-0043.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_அடியவர்-0044.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_ஊர்த்துவதாண்டவமூர்த்தி-0045.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_காளி-0046.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_நாயக்கர்-0047.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_நாயக்கர்-0048.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_விநாயகர்-0049.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_இராமர்-0050.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_கல்வெட்டு-0051.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_கல்வெட்டு-0052.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_வாகன-மண்டபம்-0053.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_சிம்ம-வாகனம்-0054.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_சிறிய-திருவடி-0055.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_சேஷ-வாகனம்-0056.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_பெரிய-திருவடி-0057.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_யானை-வாகனம்-0058.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_தேர்-வாகனம்-0059.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_குதிரை-வாகனம்-0060.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_அன்ன-வாகனம்-0061.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_பல்லக்கு-0062.jpg

TVA_TEM_000114/TVA_TEM_000114_சிந்துபட்டி_பெருமாள்-கோயில்_சப்பரம்-0063.jpg